ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடிகை ரோஜா கைதாகி, விடுதலை


ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடிகை ரோஜா கைதாகி, விடுதலை
x
தினத்தந்தி 24 July 2018 11:06 PM GMT (Updated: 24 July 2018 11:06 PM GMT)

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

நகரி,

ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடைபெற்றது. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்டன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.

அதே சமயம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. திருமலையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.

இதற்கிடையே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி நடத்தினர்.

பேரணியாக சென்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அந்தவகையில் புத்தூரில் அமைதி பேரணி நடத்திய நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜாவை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


Next Story