நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அகிலேஷ் யாதவுக்கு அதிகாரம்


நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அகிலேஷ் யாதவுக்கு அதிகாரம்
x
தினத்தந்தி 28 July 2018 11:30 PM GMT (Updated: 28 July 2018 8:27 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெறுகிறது. இதில் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய மற்றும் மாநில கட்சிகள் தொடங்கி உள்ளன.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது.

இதில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அதிகாரம் அளித்து செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதை கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோபால் யாதவ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறிய அவர், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தல் கமி‌ஷனுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முகமது ஆசம்கான் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலர் பங்கேற்கவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அனைத்து உறுப்பினர்களும் செயற்குழுவில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்று கூறினார்.


Next Story