தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீது இன்று விசாரணை


தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீது இன்று விசாரணை
x
தினத்தந்தி 30 July 2018 1:57 AM GMT (Updated: 30 July 2018 1:57 AM GMT)

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி ‘சீல்’ வைக்க கடந்த மே 28–ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம், இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடந்த 5–ந் தேதி தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story