அசாம் தேசிய பதிவேடு வெளியான விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி, ஒத்திவைப்பு


அசாம் தேசிய பதிவேடு வெளியான விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி, ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 30 July 2018 6:51 AM GMT (Updated: 30 July 2018 6:51 AM GMT)

அசாம் தேசிய பதிவேடு வெளியான விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. #NRCAssam

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பிக்களும் அமளியில் இணைந்து கொண்டதால், கடும் அமளி நிலவியது. இதையடுத்து, மாநிலங்களவையை நண்பகல் 12 மணி வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். 


Next Story