4 மாவட்டங்களுக்கு முதல்வர், விமர்சனத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில்


4 மாவட்டங்களுக்கு  முதல்வர், விமர்சனத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில்
x
தினத்தந்தி 31 July 2018 12:01 PM GMT (Updated: 31 July 2018 12:01 PM GMT)

4 மாவட்டங்களுக்கு முதல்வர் என்ற விமர்சனத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில் அளித்து உள்ளார். #HDKumaraswamy

பெங்களூர்

வடக்கு கர்நாடகாவில் உள்ள கோப்பல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், முதலமைச்சர் குமாரசாமியை 'குடகு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டுமே முதலமைச்சராக இருக்கிறார்' என புகார் கூறி வருகின்றார். 

வடக்கு கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கர்நாடகாவின் ஒட்டு மொத்த பட்ஜெட்டான 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் 514 கோடியை மட்டுமே 4 மாவட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார். 

தனது சகோதரரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணாவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை எனவும் அதுபோன்று பிரச்சினையை சிலர் உருவாக்கி வருவதாகவும் கூறினார். 

Next Story