தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ. வருகை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம் + "||" + 'Militants snatch rifle from policeman'

எம்.எல்.ஏ. வருகை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம்

எம்.எல்.ஏ. வருகை:  பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம்
காஷ்மீரில் எம்.எல்.ஏ. வருகைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரிடம் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் லோலேப் அப்துல் ஹக் கான்.  முன்னாள் மந்திரியான இவர் வடகாஷ்மீரின் குர்ராமா பகுதிக்கு இன்று செல்ல இருந்த நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகள் நடந்தன.

இதற்காக முகமது இஷாக் என்ற காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.  இந்த நிலையில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் அங்கு வந்து இஷாக்கிடம் இருந்த ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரைபிள் துப்பாக்கியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார் தப்பியோடி தீவிரவாதிகளை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.