இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பணவீக்கத்தினை முன்னிட்டு 0.25 சதவீதம் உயர்வு


இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பணவீக்கத்தினை முன்னிட்டு 0.25 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 1 Aug 2018 10:20 AM GMT (Updated: 1 Aug 2018 10:20 AM GMT)

இந்திய ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தினை முன்னிட்டு வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

மும்பை,

ரெப்போ வட்டி விகிதம் அல்லது குறுகிய கால வட்டி விகிதம் எனப்படும் மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தினை இந்திய ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் அளவிற்கு உயர்த்தி உள்ளது.  இதனால் வட்டி விகிதம் 6.25 சதவீதம் என்ற அளவில் இருந்து 6.5 சதவீதம் என்ற அளவாக உயர்ந்து உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஊர்ஜித் பட்டேல் தலைமையிலான 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழுவானது இந்த முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூலை-செப்டம்பர் வரையில், நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் ஆனது 4.2 ஆக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் 2வது அரையாண்டில் அது 4.8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

இது 4 சதவீதம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க விகிதத்தினை விட அதிகம் ஆகும்.

இதேபோன்று நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை மாற்றமின்றி 7.4 சதவீதம் என்ற அளவில் நிர்ணயித்திருந்தது.  இது இரண்டாவது அரையாண்டில் 7.5-7.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.


Next Story