சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல், வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது


சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல், வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது
x
தினத்தந்தி 3 Aug 2018 9:08 AM GMT (Updated: 3 Aug 2018 9:08 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு கடிந்துக்கொண்டதை அடுத்து வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றது.



புதுடெல்லி,

சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவு செய்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை கடந்த 13-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது. ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது என்று விமர்சனம் செய்தது.

 இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டது. 

மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது இந்த திட்டத்தை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நகர்வு மத்திய அரசால் ஆய்வு செய்யப்படும் என தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். 

Next Story