குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்


குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:45 AM GMT (Updated: 5 Aug 2018 11:45 AM GMT)

குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் கோடியை வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளது.

புதுடெல்லி, 

 2017-18ம் நிதி ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளும், 3 தனியார் வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து 4,989.55 கோடியை அபராதமாக வசூலித்து இருப்பது வங்கிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

இதில் மிக அதிகமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து இருக்கிறது. இதையடுத்து, தனியார் வங்கியான எச்.டி.எப்.சி., ரூ.590.84 கோடியை அபராதமாக வசூலித்து உள்ளது. அந்த வங்கி 2016-17ம் நிதி ஆண்டில் ரூ.619 கோடியை அபராதமாக வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் கடந்த ஆண்டில் ஆக்சிஸ் வங்கி ரூ.530 கோடியும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.317.6 கோடியும், பஞ்சாய் நேஷனல் வங்கி ரூ.211 கோடியும் வசூலித்து உள்ளன. 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கையாக, தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது. பின்னர் விமர்சனங்கள் எழுந்ததும் கடந்த அக்டோபர் மாதம் முதல் தொகையை குறைந்தது.

Next Story