தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை + "||" + 14 Maoists killed in encounter in Chhattisgarh forest

சத்தீஷ்கார் வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார் வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 14 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி,

சுக்மா மாவட்டம் கொண்டா காட்டுப்பகுதியில் 200 மாவோயிஸ்டுகள் கூட்டம் கூடுவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதனையடுத்து மாநில சிறப்பு படை மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.