தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.கே.தவான் காலமானார் + "||" + Former Union Minister RK Thavan passed away

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.கே.தவான் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.கே.தவான் காலமானார்
முன்னாள் மத்திய மந்திரியான ஆர்.கே.தவான் நேற்று காலமானார்.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவருமான ஆர்.கே.தவான் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால், ஆர்.கே.தவான் கடந்த செவ்வாய்க்கிழமை, டெல்லியில் உள்ள பி.எல்.கபூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஆர்.கே.தவான், மாநிலங்களவை எம்.பி.யாகவும், இந்திரா காந்தியின் தனி செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.