தேசிய செய்திகள்

பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் கற்பழிப்பு: 2 பாதிரியார்களின் கைதுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து + "||" + A woman who went to ask for forgiveness is raped: 2 Punishment for the arrest of the priests

பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் கற்பழிப்பு: 2 பாதிரியார்களின் கைதுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் கற்பழிப்பு: 2 பாதிரியார்களின் கைதுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து
2 பாதிரியார்களின் கைதுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது. மேலும் 13-ந் தேதிக்குள் சரண் அடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,

கேரளாவில் மலங்கரை சிரியன் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் ஒன்றில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை பாதிரியார்கள் மிரட்டி கற்பழித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சோனி வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதில் 2 பாதிரியார்கள் போலீசில் சரணடைந்த நிலையில், சோனி வர்க்கஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் இருவரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். இதை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே இவர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை நாடினர்.

அவர்களது முன்ஜாமீன் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அதில் இறுதி முடிவு எடுக்கும்வரை இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 2 பாதிரியார்களின் கைதுக்கு விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை ரத்து செய்த நீதிபதிகள், இருவரும் 13-ந்தேதிக்குள் சரணடைந்து வழக்கமான ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.