தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் துப்பாக்கிச்சண்டை: 15 நக்சலைட்டுகள் பலி + "||" + Gunfights in Chhattisgarh: 15 Naxalites killed

சத்தீஷ்காரில் துப்பாக்கிச்சண்டை: 15 நக்சலைட்டுகள் பலி

சத்தீஷ்காரில் துப்பாக்கிச்சண்டை: 15 நக்சலைட்டுகள் பலி
சத்தீஷ்காரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 15 நக்சலைட்டுகள் பலியாயினர். மேலும் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நக்சலைட்டுகள் தடுப்பு படை போலீசார் அந்த வனப்பகுதிக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் தங்களுடைய துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.


இறுதியில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இதில் காயம் அடைந்த பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரின் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.