தேசிய செய்திகள்

நடுரோட்டில் 2 ஆண்கள் சண்டை: 3வது நபருடன் சென்ற பெண்; வடிவேலு படம்போல் சம்பவம் + "||" + 2 men fighting; woman went with 3rd person

நடுரோட்டில் 2 ஆண்கள் சண்டை: 3வது நபருடன் சென்ற பெண்; வடிவேலு படம்போல் சம்பவம்

நடுரோட்டில் 2 ஆண்கள் சண்டை:  3வது நபருடன் சென்ற பெண்; வடிவேலு படம்போல் சம்பவம்
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வடிவேலு படத்தில் வருவதுபோல் பெண் ஒருவருக்காக 2 ஆண்கள் சண்டை போட்ட நிலையில் 3வது நபருடன் அந்த பெண் சென்று விட்டார்.
பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து நெலமங்களா செல்லும் தேசிய நெடுஞ்சாலை 48ல் பவிகெரே கிராஸ் என்ற சிறிய கிராம பகுதியில் 2 பேர் ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர்.  அவர்களுக்கு அருகே பெண் ஒருவர் நின்றுள்ளார்.

இதனால் அந்த வழியே சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி அவர்களை கவனித்து உள்ளனர்.  சிலர் நடந்த சம்பவத்தினை செல்போன்களில் படம் பிடித்தும் உள்ளனர்.  அவர்களை சிலர் தடுத்து நிறுத்தவும் முயன்றுள்ளனர்.

இதனிடையே அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.  தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சசிகலா (வயது 38) என தெரிய வந்தது.  அவர் கடந்த 2000ம் ஆண்டில் ரங்கசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார்.  அது 2010ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

அதன்பின் துணி தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்த ரமேஷ் என்பவருடன் சசிகலா வாழ்ந்து வந்துள்ளார்.  தொடர்ந்து 2015ம் ஆண்டில் குமார் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.  பின் 6 மாதங்கள் கழித்து அவரை பிரிந்து சென்ற சசிகலா 2017ம் ஆண்டில் சிக்கபிதருகல்லு மூர்த்தி என்பவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.

இதில் மூர்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.  இதேவேளையில் சசிகலா பணிபுரிந்த துணி தொழிற்சாலையில் வேன் டிரைவராக சித்தராஜு என்பவர் இருந்துள்ளார்.  அவர் சசிகலாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி இதுபற்றி தெரிவித்துள்ளார்.

மூர்த்திக்கு திருமணம் ஆகி விட்டது.  சித்தராஜுவுக்கு திருமணம் ஆகவில்லை என கணக்கு போட்ட சசிகலா இதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.  இதன்பின் பேருந்து நிலையம் ஒன்றில் சித்தராஜுவுடன் கடந்த சனிக்கிழமை சசிகலா நின்று கொண்டு இருந்துள்ளார்.  அங்கு வந்த மூர்த்தி, சித்தராஜுவை தாக்க தொடங்கி உள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறாய் என சசிகலாவிடம் போலீசார் கேட்டபொழுது, இருவரும் எனது நண்பர்கள்.  ஒருவர் மீது ஒருவர் பொறாமையில் உள்ளனர் என பதிலளித்து உள்ளார்.  இதனிடையே சசிகலாவின் நண்பர் என கூறி கொண்டு 3வது நபரொருவர் அங்கு வந்துள்ளார்.  அவருடன் சசிகலா சென்று விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது
கடலூர் முதுநகரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினர்.
2. சபரிமலை போல் மற்றொரு விவகாரம்; ஆண்கள் மட்டும் வணங்கும் கடவுளை வழிபட சென்ற பெண்
கேரளாவில் ஆண்கள் மட்டும் செல்ல கூடிய மலை பகுதிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியை அடுத்து கடவுளை வழிபட பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
3. ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
ஈரோட்டில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை - தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொக்லைன் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
5. மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளி கைது
மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.