சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா பானர்ஜி உள்பட 3 பேர் நீதிபதிகளாக இன்று பதவியேற்பு


சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா பானர்ஜி உள்பட 3 பேர் நீதிபதிகளாக இன்று பதவியேற்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 7:51 AM GMT (Updated: 7 Aug 2018 7:51 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் இன்று பதவியேற்று கொண்டனர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.  அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

அவர்கள் 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் சிபாரிசு செய்திருந்தது.

இவர்களில் இந்திரா பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.  இதனால் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது உள்ள பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3 ஆக உயரும். தற்போது, ஆர்.பானுமதி, இந்து மல்கோத்ரா ஆகிய 2 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

இந்திரா பானர்ஜி, 2002-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி, கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதியில் இருந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.

அவருடன், ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரும் இன்று பதவியேற்று கொண்டனர்.

Next Story