தேசிய செய்திகள்

நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் யாரும் உன்னை கேலி செய்வார்கள் மாணவனிடம் கூறிய ஆசிரியர் + "||" + 'You are so cute that anyone will tease you', Delhi school teacher's reply to class 4 student on sexual abuse complaint

நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் யாரும் உன்னை கேலி செய்வார்கள் மாணவனிடம் கூறிய ஆசிரியர்

நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்  யாரும் உன்னை கேலி செய்வார்கள் மாணவனிடம் கூறிய ஆசிரியர்
தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என புகார் கூறிய மாணவரிடம் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் யாரும் உன்னை கேலி செய்வார்கள் என்று கூறிய ஆசிரியர்
புதுடெல்லி

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியின் 4-ம் வகுப்பு  மாணவர், மூன்று மூத்த மாணவர்களால்  பள்ளிக்கூட பஸ்சில் வைத்து பாலியல் ரீதியாக கடந்த 3 மாதங்களாக துன்புறுத்தபட்டார் . இதை தொடர்ந்து அந்த மாணவர். இது குறித்து ஆசிரியரிடம் புகார் கூறினார், அதற்கு அந்த ஆசிரியர்   நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்  யாரும் உன்னை கேலி செய்வார்கள் என கூறி உள்ளார். ஏற்கனவே பள்ளிக்கூட பஸ் பொறுப்பாளரான ஆசிரியரிடம் மாணவன் உகார் கூறி உள்ளான். ஆனால்  அந்த மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை தொடர்ந்து மாணவன் வீட்டில் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி தனது அறையை பூட்டிக்கொண்டான். இது குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியின் நிர்வாகிகளின் கவனத்திற்கு  எடுத்து சென்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் உடனடியாக போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.