தேசிய செய்திகள்

பெங்களூருவில் வங்காளதேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது + "||" + Top leader of Bangaldesh-based militant outfit held in B luru

பெங்களூருவில் வங்காளதேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது

பெங்களூருவில் வங்காளதேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது
பெங்களூருவில் வங்காளதேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
பெங்களூரு,

பீகார் மாநிலம் புத்தகயாவில் இவ்வருட தொடக்கத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இப்போது, இவ்வழக்கில் தொடர்புடைய வங்காளதேச பயங்கரவாதியை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. ஜமாத்-உல்-பங்களாதேஷ் இயக்கத்தின் தலைவன் முகமது ஜாகிதுல் இஸ்லாமை கைது செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநகரா பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த முகமது ஜாகிதுல் இஸ்லாமிடம் இருந்து வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.