வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது : மத்திய அரசு விளக்கம்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது : மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 8 Aug 2018 10:40 AM GMT (Updated: 8 Aug 2018 10:40 AM GMT)

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், தகவல் அளிக்குமாறு  வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும் போது, “இந்திய குடிமக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. 

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 - படி இந்தியர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணபிக்க முடியும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  விண்ணப்பிப்பவர்  www.rtionline.gov.in என்ற இணையதளத்தில், எந்த அமைச்சகத்தின் கீழ் தகவல்களை பெற வேண்டுமே அதை தேர்வு செய்து, தகவல் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு தெளிவான விளக்கங்கள்,  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலமாகவே விண்ணப்ப கட்டணத்தையும் தகவல் அறியும்  உரிமைக்கான விண்ணப்பத்தையும் விண்ணப்பதாரார்கள் பதிவு செய்ய முடியும்:” என்றார். 

Next Story