தேசிய செய்திகள்

டெல்லியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை + "||" + A one-month-old girl was found in a heap of garbage in Mukarba chowk

டெல்லியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை

டெல்லியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை
டெல்லியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று, குப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் முகர்பா சவுக்கில் உள்ள சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது அந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  குழந்தை அழுகுரல் கேட்டு குப்பைதொட்டியில் போய் பார்த்துள்ளனர். 

அப்போது பிறந்த ஒரு மாதமே ஆண பெண் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.