தாயாரின் கருப்பபை மூலம் குழந்தை பெறப்போகும் மகள்


தாயாரின் கருப்பபை மூலம் குழந்தை பெறப்போகும் மகள்
x
தினத்தந்தி 9 Aug 2018 8:32 AM GMT (Updated: 9 Aug 2018 8:32 AM GMT)

ஆசியாவில் முதல் முறையாக தாயாரின் கருப்பபை மூலம் விரைவில் குழந்தை பெறப்போகும் மகள்.


மகாராஷ்டிரா சோலாப்பூரை சேர்ந்தவர்  ஷிவம்மா சல்கரி  மற்றும்  குஜராத்தை சேர்ந்த மீனாட்சி வால்ட்  ஆகியோருக்கு கடந்த ஆண்டு மே 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நாட்டின் முதல் கருப்பை  மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

இதில் மீனாட்சிக்கு அவரது தாயின் கருப்பைதான்  பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக புனேவில் உள்ள  கேலக்ஸி  மருத்துவமனையின்  கவனிப்பில்  27 வயதான மீனாட்சி வால்ண்டின் இருந்து வருகிறார். 20 வது வார கர்ப்பிணியாக உள்ள மீனாட்சி ஒரு கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெறப்போகும் பெண்ணாக உள்ளார்

மீனாட்சிக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது, மீனாட்சி இரண்டு குழந்தைகளை முழுநேர  கர்ப்பத்திற்கு பிறகு  இழந்தார், அது போல் நான்கு முறை கருக்கலைப்புகள் செய்து உள்ளார். இதனை தொடர்ந்து  அவரது கருப்பை மிகவும் மோசமாக இருந்தது. 

தானமாக பெற்ற கருப்பையை   பொருத்தி குஜராத் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஒருவரின்  கருப்பையை எடுத்து மற்றொருவருக்கு பொருத்தி குழந்தை பெறுவது என்பது உலகிலேயே 9வது முறை என்பதும், ஆசியாவிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிகிச்சையைப் குறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஷைலேஷ் புந்தம்பேக்கர் கூறியதாவது:-

 ‘‘இப்பெண்ணின் தாயின் கருப்பை இப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருப்பை 20 ஆண்டுகளாக குழந்தை எதையும் பெறவில்லை. பொதுவாக, கருப்பை மாற்றுதல் என்பது கடினமான வேலை. இது ஒரு சாதாரண அறுவை சிகிச்சை அல்ல, தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன. கரு வளர்ச்சி மிகவும் முற்றிலும் உட்பொதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Next Story