சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக மாநிலங்களவைக்கு வந்தார் அருண் ஜெட்லி


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக மாநிலங்களவைக்கு வந்தார் அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 9 Aug 2018 12:51 PM GMT (Updated: 9 Aug 2018 12:51 PM GMT)

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக மாநிலங்களவைக்கு அருண் ஜெட்லி இன்று வருகை தந்தார். #ArunJaitley

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வந்த அருண் ஜெட்லி, அவ்வப்போது, அரசின் சாதனைகள் பற்றியும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தும் தனது பிளாக்கில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அருண்ஜெட்லி ஓய்வில் இருந்ததால், அவர் வசம் இருந்த நிதித்துறை, பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக மாநிலங்களவைக்கு அருண் ஜெட்லி இன்று வருகை தந்தார். அருண் ஜெட்லியை, காங்கிரஸ் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வரவேற்றனர். அருண் ஜெட்லி, அவைக்கு வந்து இருப்பது பற்றி பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 உறுப்பினர்கள் மேஜையை தட்டி அருண் ஜெட்லியை வரவேற்றனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, உறுப்பினர்கள் அருண் ஜெட்லியை தொட்டு பேசவோ, நெருங்கி சென்று பேசவோ வேண்டாம் என்று சக உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.


Next Story