தேசிய செய்திகள்

காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு + "||" + Lok Sabha adjourned by Congress

காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பி. மல்லிகார்ஜூன் கார்கே எழுந்து, தனியார் நிறுவனம் பயனடையவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதே சமயம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் கோ‌ஷமிட்டனர். இரு கட்சியினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முயன்றார். ஆனால் அமளி தொடர்ந்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவைக்கு வந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, நிதி மந்திரி பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

1. உர்ஜித் படேல் ராஜினாமா; பா.ஜனதா அரசு மற்றொரு நிறுவனத்தை இழிவுபடுத்தி உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஆர்.பி.ஐ.யை இழிவுபடுத்தியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்
ரபேல் போர் விமான ஒப்பந்தம், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
3. பா.ஜனதாவுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நன்கொடை தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல்
கடந்த 2017-18-ம் ஆண்டில் ஆளும் பா.ஜனதாவுக்கு ரூ. 1000 கோடிக்கு மேல் அதிகமாக நன்கொடைகள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4. நேர்மையான பிரதமராக இருப்பேன் என்ற வாக்குறுதியையும் மோடி உடைத்துவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு
நேர்மையான பிரதமராக இருப்பேன் என்ற வாக்குறுதியையும் பிரதமர் மோடி உடைத்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கிப் பேசியுள்ளார்.
5. சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.