தேசிய செய்திகள்

27–ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் : தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு + "||" + All Party Meeting on 27th: Organizing Election Commission

27–ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் : தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு

27–ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் : தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் கமி‌ஷன் டெல்லியில் வருகிற 27–ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

புதுடெல்லி,

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 17 எதிர்க்கட்சிகள் பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதால் இதுகுறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கமி‌ஷன் கட்சிகளை சந்திப்பது வழக்கமானது தான்.

இதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை மட்டுமின்றி விளம்பரங்கள், நடத்தை விதிமுறைகளை மீறுவது, அவதூறான பேச்சுகள் ஆகியவை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என தகவல் தரும் எந்திரங்கள் வாங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கட்சிகளுக்கு விளக்கப்படும் என தேர்தல் கமி‌ஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தியுடன் சரத்பவார் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
2. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடக்கம் - மாநகராட்சி கமிஷனர்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
3. மாயாவதி நடவடிக்கையால் நாடாளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவாக வாய்ப்பு
சத்தீஷ்காரை தொடர்ந்து மத்திய பிரதேச தேர்தலிலும் மாயாவதி, அணி மாறுவதால் நாடாளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
4. நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமனம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
5. நாடாளுமன்ற தேர்தல்: மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியா?
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியிட போவது குறித்து, அவரது கணவர் கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.