தற்கால அரசியல் தலைவர்கள், வாஜ்பாயிடம் நிறைய கற்க வேண்டியுள்ளது - உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் | வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் | நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்த மிகச்சிறந்த மனிதரை தேசம் இழந்துள்ளது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி | டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது | தனது வாழ்நாள் முழுவதையுமே தேச நலனுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் | தலைச்சிறந்த மகனை இந்தியா இழந்துள்ளது - காங். தலைவர் ராகுல்காந்தி இரங்கல் | வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் |

தேசிய செய்திகள்

2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது + "||" + Class 2 Student Raped Allegedly By Electrician In Delhi Government School

2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது
2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
புதுடெல்லி,

நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசுப்பள்ளி வளாகத்தில் வைத்து 2 -ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டவன் பள்ளிக்கு அருகில் வசிப்பவன் என்றும் எலக்ட்ரிஷியனாக அவன் வேலை பார்த்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியை வலுக்கட்டாயமாக பள்ளி வளாகத்தில் உள்ள   மறைவிடத்திற்கு அழைத்துச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர், பள்ளி அருகே உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து,  12-வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.