தேசிய செய்திகள்

மும்பையில் குவியல் குவியலாக பயங்கர வெடிபொருட்கள்: சுதந்திர தினத்தை சீர்க்குலைக்க பயங்கரவாதிகள் சதியா? + "||" + Mumbai: ATS confiscates explosives from Sanatan Sansthan worker Vaibhav Raut's home, investigation underway

மும்பையில் குவியல் குவியலாக பயங்கர வெடிபொருட்கள்: சுதந்திர தினத்தை சீர்க்குலைக்க பயங்கரவாதிகள் சதியா?

மும்பையில் குவியல் குவியலாக பயங்கர வெடிபொருட்கள்: சுதந்திர தினத்தை சீர்க்குலைக்க பயங்கரவாதிகள் சதியா?
மும்பையில் சனாதன் சன்ஸ்தான் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பயங்கர வெடிப்பொருட்களை ஏடிஎஸ் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,

மும்பையின் மையப்பகுதியான நாலா சோபாரா என்ற பகுதியில் வைபரவுத் குடியிருப்பு பகுதியில்  சனாதன் சன்ஸ்தான் என்பவர் வீட்டில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஏ.டி.எஸ். எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் குறித்து விரைந்த  ஏ.டி.எஸ். படையினர் குடியிருப்பு பகுதியில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். 

சோதனையில் பயங்கர வெடிபொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதனை பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிப்பொருட்களை பதுக்கு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம் துவங்க உள்ள நிலையில் அதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதிதிட்டத்தை நிறைவேற்ற பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனரா? என்ற கோணத்தில் விசாரனை நடைப்பெற்று வருகிறது.

மும்பையின் மையப்பகுதியில் பயங்கர வெடிப்பொருட்கள்  ஏடிஎஸ் படையினர் பறிமுதல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.