தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் நிலை ஆராய குழு + "||" + In prisons in India Overflowing Prisoners position Exploratory board

இந்தியாவில் உள்ள சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் நிலை ஆராய குழு

இந்தியாவில் உள்ள சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் நிலை ஆராய குழு
இந்திய சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி மதன் பி.லோகுர் கருத்து தெரிவிக்கையில், “இது மனித உரிமைகள் விவகாரம். கோர்ட்டுகள் ஜாமீன் வழங்கியும்கூட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்” என கூறினார்.


மேலும் சிறைகளில் நிரம்பி வழிகிற கைதிகளின் நிலை குறித்து ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டார்.

இந்த குழுவில் அரசு அதிகாரிகள் இடம் பெறுவார்கள்; அவர்கள் நீதிபதியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்; கூட்டம் நிரம்பி வழிகிற சிறைகளில் உள்ள கைதிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனைகள் தெரிவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அரசு சார்பில் வாதிட்ட அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “ நம்மிடம் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. நிதி, மிகப்பெரிய தடையாக உள்ளது. அதில் இருந்து கடந்து வருவதற்கு முயற்சி செய்கிறோம்” என்று குறிப்பிட்டார்.