தேசிய செய்திகள்

பாக். பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான் விடுத்த அழைப்பை நிராகரித்தார் சுனில் கவாஸ்கர் + "||" + Sunil Gavaskar declines invitation for Imran Khan's oath-taking ceremony

பாக். பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான் விடுத்த அழைப்பை நிராகரித்தார் சுனில் கவாஸ்கர்

பாக். பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான் விடுத்த அழைப்பை நிராகரித்தார் சுனில் கவாஸ்கர்
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு இம்ரான் கான் விடுத்த அழைப்பை சுனில் கவாஸ்கர் நிராகரித்துள்ளார்.
புதுடெல்லி,

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற  பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, இம்ரான் கானின் முக்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கபில் தேவ் சுனில் கவாஸ்கர், சித்து  உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோக தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இம்ரான்கான் விடுத்த அழைப்பை சுனில் கவாஸ்கர் நிராகரித்துள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனில் கவாஸ்கர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- “ ஒரு கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் பலமுறை இந்தியா வந்துள்ளார். இந்திய மக்களோடு நன்கு உரையாடியுள்ளார். 

எனவே, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு உறவு விவகாரத்தில், இம்ரான்கான் செயல்பாடுகள் பற்றி என்னிடம் பெருத்த எதிர்பார்ப்புகள் உள்ளன. இம்ரான்கான் என்னிடம், தொலைபேசியில் பேசினார்.  ஆனால், ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி இருப்பதால், தன்னால் பங்கேற்க இயலாது என்று இம்ரான் கானிடம் கூறிவிட்டேன்” என்றார் கவாஸ்கர்,