தேசிய செய்திகள்

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை ஓட்டல் உரிமையாளர் கைது + "||" + 14 year old boy is sexually harassed The owner of the hotel was arrested

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை ஓட்டல் உரிமையாளர் கைது

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை ஓட்டல் உரிமையாளர் கைது
உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து உத்தரகாண்டின் ஹரித்வாருக்கு புனித யாத்திரை சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது அவர்களது கையில் இருந்த பணம் தீர்ந்தது.

எனவே உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணத்துக்காக சிறுசிறு பணிகளை செய்து கொடுத்தனர். அப்போது அந்த குழுவில் இருந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கு ஓட்டல் உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார் செய்தான். அதன்படி ‘போக்சோ’ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

முசாபர்நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 16 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 22 வயது வாலிபர் ஒருவரை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.