தேசிய செய்திகள்

பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி இருந்தும் மகாத்மா காந்திக்கு எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லை + "||" + Permission from the UGC Mahatma Gandhi has no seat in any university

பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி இருந்தும் மகாத்மா காந்திக்கு எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லை

பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி இருந்தும் மகாத்மா காந்திக்கு எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லை
நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு பல்கலைக்கழகங்கள் இருக்கை அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி இருக்கிறது.

புதுடெல்லி,

மகாத்மா காந்தி பெயரால் இருக்கை இதுவரை எந்த பல்கலைக்கழகத்திலும் அமைக்கப்படவில்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அமைதி, அகிம்சை, சுதந்திரப் போராட்ட இயக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகிய பொருள்களில் மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு இருக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி தந்து உள்ளது. இருப்பினும் மகாத்மா காந்தி இருக்கை எந்த பல்கலைக்கழகத்திலும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்த பல்கலைக்கழகத்திடம் இருந்தும் திட்ட முன்வடிவும் பெறப்படவில்லை’’ என்று கூறினார்.

அதே நேரத்தில், காந்திய கொள்கை சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் விருப்பம் கொண்டு இருக்கின்றனர். காந்திய கொள்கை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில் ஆய்வு, பி.எச்.டி. ஆய்வு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

இதற்கு 2017–18 கல்வி ஆண்டில் காந்திய கொள்கை தொடர்பாக 78 பேர் பி.எச்.டி. ஆய்வுக்கு பதிவு செய்து உள்ளனர் என்பதே சான்றாக அமைந்து உள்ளது.