தேசிய செய்திகள்

பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது + "||" + The second day of BJP's State Working Committee Meeting begins in Meerut

பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது

பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது
பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது
மீரட்,

பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கி நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது.  இதனை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார்.  அவர் பாரதீய ஜனதா ஆட்சியில் தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறினார்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மக்களவைக்கான தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றுவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.