தேசிய செய்திகள்

72-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரம் + "||" + 72nd Independence Day Flag Manufacture Starts

72-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

72-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரம்
72-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதனையொட்டி தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கவுகாத்தி,

72-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அசாமில் உள்ள கவுஹாத்தியில் கதரில் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டு வருகிறது.

அசாம் அரசு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடையால் கதர் மற்றும் வீட்டுப்பருத்தியில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. அசாமின் கதர் மற்றும் கிராம தொழில்களின் வாரியம் இதை செய்கின்றது. 

இந்த வருடம் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கதரால் ஆன கொடிகள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.