தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் கைது + "||" + 1 cop killed, 2 terrorists held in encounter in JK

காஷ்மீர் என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீர் என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.


பாடாமோலா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு படைகள் அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியை அதிகாலையில் தொடங்கியது. அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டார்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. 

பயங்கரவாதிகளில் இருவர் இருட்டை பயன்படுத்தி காயங்களுடன் தப்பிவிட்டனர். இருவர் சிக்கிக்கொண்டனர். அவர்களை பாதுகாப்பு படை கைது செய்தது. பாதுகாப்பு படைகள் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியை தொடர்ந்து வருகிறது.