வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2018 9:55 AM GMT (Updated: 12 Aug 2018 9:55 AM GMT)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ஆலோசனையை மேற்கொண்டார். #KeralaFloods


திருவனந்தபுரம்,


கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், பாலங்கள் என கட்டமைப்பு அனைத்தும் உருகுலைந்துவிட்டது. வீடுகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவி நிதி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய படைகள் உதவிப்பணிகள் ஈடுபட்டுள்ளது. மாநிலத்திற்கு தேவையான உதவிகளை தரும்படி மத்திய அரசிடம் பினராயி விஜயன் அரசு கோரிக்கையை விடுத்துள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானம் மூலம் பார்வையிட்டார். மாநிலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் நீர் குறைந்தது காரணமாக அச்சம் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வது மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. 

கொச்சியில் பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையை மேற்கொண்டார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து உள்ளது என பினராய் விஜயன் கூறியுள்ளார். 


Next Story