பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் மரணம்: காப்பக உரிமையாளர் கைது


பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் மரணம்: காப்பக உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 4:11 PM GMT (Updated: 12 Aug 2018 4:11 PM GMT)

பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக காப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #BiharShelter

பாட்னா,

பீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் 17 வயது மற்றும் 21 வயதுமிக்க பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்களின் மரணம் குறித்து துணை போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சுதாசு நிருபர்களிடம் கூறுகையில், ”அதிக காய்ச்சல் காரணமாக பெண்கள் இருவரும் நேற்றிரவு பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பெண்கள் இறப்பு குறித்த தகவல் இன்று காலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகிய இருவரையும் கைது விசாரித்து வருகிறோம். முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடிய தகவலும் வெளியாகியுள்ளது” எனக் கூறினார்.

Next Story