தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் + "||" + Threatened to kill at Bahujan Samaj MLA in Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியா தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமா சங்கர்.

லக்னோ,

உமா சங்கர் எம்.எல்.ஏ. தலைநகர் லக்னோவில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 8–ந்தேதி இ.மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் புகைப்படம் இருந்தது. அதோடு ‘‘நீங்கள் பாலியா தொகுதி மக்களுக்காக உழைக்கிறீர்கள். நீங்கள் அதை தொடர விரும்பினால் எங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும். இல்லையென்றால் ஒரே ஒரு துப்பாக்கி குண்டு உங்களுக்கு போதும். எந்த நேரத்திலும் உங்களை கொலை செய்வோம்’’ என்ற வாசகமும் இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக உமா சங்கர் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.