‘இந்தியா, தர்மசத்திரம் அல்ல’ தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்


‘இந்தியா, தர்மசத்திரம் அல்ல’ தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:18 PM GMT (Updated: 12 Aug 2018 10:18 PM GMT)

பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெய்ப்பூர்,

வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

ஆகவே, 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த வி‌ஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story