மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை 2-வது நாளாக நிறுத்தம்


மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை 2-வது நாளாக நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Aug 2018 6:40 AM GMT (Updated: 14 Aug 2018 6:40 AM GMT)

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு,

மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக பகவதிநகர் முகாமிலிருந்து, அமர்நாத் யாத்திரை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மோசமான வானிலை நீடிப்பதால் 2-வது நாளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டு தோறும் 60 நாள்கள் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது. அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தின் பல்டால் ஆகிய இரு பாதைகளின் வழியாக பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். 

அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து, 3, 880 மீ உயரத்தில் உள்ள குகையில் அமைந்துள்ள பனிலிங்கத்தை இதுவரை 2, 78, 878 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு, பனிலிங்கம் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாக உருகி வருவதால் புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று அமர்நாத் புனித யாத்திரை நிறைவடைகிறது

Next Story