டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 16 Aug 2018 4:12 AM GMT (Updated: 16 Aug 2018 4:12 AM GMT)

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

புதுடெல்லி,

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 70.1 ஆக இருந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து இருந்தது. பின்னர் வர்த்தக நேர முடிவில் 69.90 ஆக இருந்தது. 

இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்குஎதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய மதிப்பை விட 43 காசுகள் குறைந்து  தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு 70.32 ஆக உள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும். அந்நியச்செலாவணி சந்தையில்  சில கட்டுப்பாடுகளை விதித்து டாலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 


Next Story