ரஜினிகாந்த் ஆதரவை மதிக்கிறேன் - வாஜ்பாய்


ரஜினிகாந்த் ஆதரவை மதிக்கிறேன் - வாஜ்பாய்
x
தினத்தந்தி 16 Aug 2018 11:00 PM GMT (Updated: 16 Aug 2018 10:10 PM GMT)

தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில்(1-05-2004), ரஜினிகாந்த் ஆதரவை மதிக்கிறேன் என வாஜ்பாய் கூறினார்.

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் எனது ஓட்டு என்று அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் பா.ஜ.க.வில் சேர வாய்ப்பு உண்டா?, அவர் பா.ஜ.க.வுக்கு அளிக்கும் ஆதரவு பற்றி உங்களிடம் பேசினாரா?

பதில்:- நான் ரஜினிகாந்த்தை பாராட்டுகிறேன். அவர் சிறந்த நடிகர். தமிழ் சினிமாவில் ஜாம்பவான். அவர் சமுதாய உணர்வுள்ள நடிகர் அவரது ஆதரவை நான் பெரிதும் மதிக்கிறேன். என்றாலும் அவர் பா.ஜ.க.வில் சேரும் கேள்வி ஒருபோதும் எழவில்லை.

கேள்வி:- நதிநீர் இணைப்பு திட்டத்தில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள்?

பதில்:- அது எங்கள் முன்னுரிமையில் ஒன்றாகும். நமது நாடு பல நதிகளைக் கொண்டதாகும். ஆனால் நாம் இந்த உள்ளூர் மற்றும் நுண்ணிய முயற்சிகளுக்கு உதவுவோம். நாங்கள் ஏற்கனவே கடலோர பகுதிகளில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளோம். எனது அடுத்த உறுதிமொழி தமிழக மக்களின் தேவையான நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் சேது சமுத்திர திட்டப்பணிகளை தொடங்குவதுதான். நதி நீர் வீணாக போகவிட்டு விடுகிறோம். இதற்கு பதிலாக நமது நீர் ஆதாரங்கள் நமது மக்களின் தாகத்தை தீர்க்க, நமது தரிசு நிலங்களில் பாய, நம்மையே சார்ந்து இருக்கும் அமைதியான கால்நடைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

நதிகளை இணைக்கும் திட்டம் கங்கைகாவிரி திட்டம் என்று எல்லோராலும் கூறப்பட்ட திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவான திட்டமாகும். ஆனால் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அரசாங்கங்கள் இதை தீவிர கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் அரசாங்கம் தான் இதற்காக ஒரு பணிக்குழுவை ஒரு வரைபடம் தயாரிக்க அமைத்தது. சில இணைப்புகள் தொடர்பான பணிகளை மிக விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்துக்கு நதிகள் தொடங்கும் மாநிலங்களின் ஒத்துழைப்பு வேண்டும். இந்த கனவு நனவாக பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றுபட்டு பணியாற்றும் என்பது தமிழக மக்களுக்கு எங்களின் புனிதமான வாக்குறுதியாகும். இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

Next Story