தேசிய செய்திகள்

கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + Roots are flooded For coastal areas in Vaigai river Flood Risk Warning

கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை ஆற்றில் கரைபுரளும் வெள்ளத்தால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.

இதன் காரணமாக பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி கரையோரங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. 

முல்லைபெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 66 அடியை எட்டியுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டவுள்ளது. இதனால் அணையிலிருந்து நீர் திறக்கப்படவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.