தேசிய செய்திகள்

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம் + "||" + Truth has triumphed, GDP back series data shows best economic growth under UPA: Ex- FM Chidambaram

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்

காங்கிரஸ் கூட்டணி  ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்
உண்மை வெற்றி பெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொடர் தரவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
புதுடெல்லி

தேசிய புள்ளிவிவர ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ரியல் செக்டார் புள்ளிவிபரங்களின் குழுவினால் தயாரிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்தைய தொடர் தரவுகளின் மீது தனது கருத்துக்களை இன்று முன்னாள் மத்திய நிதி மந்திரி பி.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புள்ளிவிபர அறிக்கை  இணையத்தளத்தில் புள்ளிவிபரம் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பழைய  (2004-05) மற்றும் 2011-12 விலைகளின் அடிப்படையில் புதிய தரவு  ஆகியவற்றுக்கு இடையேயான வளர்ச்சி விகிதங்களை இந்த அறிக்கை ஒப்பிடுகிறது.

2005-06 ஆம் ஆண்டில் இருந்து 2014-15 ஆண்டு வரையிலான புதிய அடிப்படை காலத்தை அடிப்படையாகக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களை இது சரிசெய்துள்ளது.

1988-89ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக அதிகமான வளர்ச்சி விகிதம் 10.2% ஆக பதிவு செய்யப்பட்டு உள்ளது.பின்னர் பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் திட்டத்தை துவக்கிய பின்னர் நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் இதுவாகும்.

வளர்ச்சிக்கு பிரதிபலிக்கும் வகையில்  பி சிதம்பரம் டுவீட் செய்து உள்ளார்.

உண்மை வெற்றி பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்தைய தொடர் கணிப்பு  ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியில்  2004-2014 ஆண்டுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி என்று நிரூபித்துள்ளது.

1999 முதல் 4 அரசாங்கங்களின் கீழ் சராசரி வளர்ச்சி விகிதம்: தேசிய ஜனநாயக கூட்டணி முதல் - 5.68% ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் - 8.36% ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது - 7.68% தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது - 7.35% (4 ஆண்டுகள்) நான் மோடியின் ஐந்தாவது வருட அரசாங்கத்தை விரும்புகிறேன். இது முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தை பிடிக்க முடியாது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தையாவது  பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கங்கள் மிகச் சிறந்த தசாப்த கால வளர்ச்சியை வழங்கின; 14 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பத்து வருடங்களாக அவர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பிற்காக மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி - ப.சிதம்பரம் பேட்டி
கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
2. தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்
தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
3. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் : சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.
4. 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை - ப.சிதம்பரம்
தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
5. "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்நிறுத்தவில்லை" - ப.சிதம்பரம்
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக முன்நிறுத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.