தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல் + "||" + Please declare #Kerala floods a National Disaster without any delay says pm modi

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #KeralaFloods2018
புதுடெல்லி, 

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தென்மேற்கு பருவமழையால் வெள்ளக்காடாகியுள்ளது.  கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. 

அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியனோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. 

கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தத்தளித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி உள்ளனர்.வெள்ள பாதிப்புகளை  ஆய்வு செய்ய கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி,  ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதோடு, ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்தார். கேரளாவுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ 500 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். 

இதற்கிடையே, கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- “  கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. வீர சவார்கருக்கு எதிராக அவதூறு பேச்சு; ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
சுதந்திர போராட்ட வீரர் வீர சவார்கருக்கு எதிராக அவதூறாக பேசினார் என கூறி அவரது பேரன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
2. நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது -ராகுல் காந்தி
நாடு மக்களால் நடத்தப்படுகிறது. ஒரு மனிதரால் அல்ல என்பது கூட மோடிக்கு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. சிவலிங்கத்தின் மீதுள்ள தேள் மோடி: சசிதரூர் கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
4. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி கூறினார்.
5. ரபேல் ஒப்பந்த விவகாரம்; ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் பொய்களை தயாரித்து வருகிறார்: பா.ஜ.க.
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் பொய்களை தயாரித்து வருகிறார் என பாரதீய ஜனதா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.