தேசிய செய்திகள்

கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு + "||" + Actress Amala Paul relief aid - public praise

கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு

கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு
நடிகை அமலாபால் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போட்டபடி, கேரளாவில் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். அவரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
கொச்சி,

நடிகை அமலாபால், ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது கையில் பலத்த அடிபட்டு காயம் அடைந்தார். இதற்காக அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கையில் கட்டு போடப்பட்டது.

கையில் கட்டுப்போட்ட நிலையில், அவர் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை அவரே கடைகளுக்கு சென்று வாங்கினார். வெள்ள சேதம் பாதித்த இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். கையில் கட்டுப்போட்ட நிலையில் அவர் நிவாரண உதவிகளை செய்ததை பார்த்து, பொதுமக்கள் பாராட்டினார்கள்.

அவர் கையில் கட்டுடன் நிவாரண பொருட்களை வாங்குவது, பின்னர் அவற்றை பொதுமக்களுக்கு அவர் வழங்குவது ஆகிய புகைப்படங்கள், இணையதளங்களில் பரவி வருகிறது. அமலாபாலின் மனிதாபிமானத்தை அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் நிவின்பாலி ஒரு உருக்கமான அறிக்கை மூலம் கேரள மக்களுக்கு உதவி கோரி வருகிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கடவுளின் தேசம் என்ற கேரளாவில் பிறந்ததற்காக நான் பெருமை கொண்டிருந்தேன். ஆனால், இன்று அந்த அழகிய கேரளா வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவின்றி, அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசிய பொருட்களை உடனடியாக அனுப்புங்கள்.

யார் மூலமாக என்பது முக்கியமல்ல. உடனடியாக உதவிகள் வந்து சேரவேண்டும் என்பதுதான் முக்கியம். கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டு கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் நிவின்பாலி கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி: பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்
தெங்கால் அருகே தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. தேவகோட்டை நகராட்சியில் மறுசுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
தேவகோட்டை நகராட்சியின் மறு சுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
3. குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4. நல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
நல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. நம்பியூரில் பதுக்கி வைத்து மது விற்பனை: 3 கடைகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள் 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்
நம்பியூரில் பதுக்கி வைத்து மதுவை விற்ற 3 கடைகளுக்குள் பொதுமக்கள் புகுந்து அடித்து நொறுக்கினர். கடந்த 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்து பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.