மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 38,126.65 புள்ளிகளை தொட்டது


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 38,126.65 புள்ளிகளை தொட்டது
x
தினத்தந்தி 20 Aug 2018 5:04 AM GMT (Updated: 20 Aug 2018 5:04 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 38,126.65 புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 263.06 புள்ளிகள் கடந்து 38,210.94 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.

இது கடந்த ஆகஸ்டு 9ந்தேதி இருந்த 38,076.23 என்ற முந்தைய சாதனை பதிவை விட அதிக அளவாகும்.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு முதன்முறையாக 11,500 புள்ளிகளை தொட்டுள்ளது.  இது 46.50 புள்ளிகள் கடந்து 11,517.25 புள்ளிகளாக உள்ளது.

இது கடந்த ஆகஸ்டு 9ந்தேதி இருந்த 11,495.20 என்ற அதிகபட்ச அளவை விட அதிகம் ஆகும்.

உலோகம், ரியல் எஸ்டேட், உட்கட்டமைப்பு, எண்ணெய் மற்றும் வாயு மற்றும் வங்கி பங்குகள் 2.78 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன.  இதேபோன்று எல் அண்டு டி, ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் 4.17 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து புதிய உச்சம் தொட்டுள்ளன.


Next Story