தேசிய செய்திகள்

உதவிக்கு சென்ற 11 பேர், இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை + "||" + Jharkhand: Two girls called-up friend for help, he sent 11 who raped them

உதவிக்கு சென்ற 11 பேர், இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை

உதவிக்கு சென்ற 11 பேர், இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை
ஜார்க்கண்டில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராஞ்சி

கடந்த ஆகஸ்ட் 16 ந்தேதி 2 சிறுமிகள்  ஜார்கண்ட் மாநிலம்  ஹர்கி ஹர்ரா டோலி பகுதிக்குச் சென்றனர்.அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர்.  ஹிர்கி ரெயில்வே பாலம் அருகே  எதோ பிரச்சினை என சிறுமிகளில் ஒருவர்  தனது நண்பரை  போனில் அழைத்து உள்ளார்.ஆனால் அவர் உதவிக்கு 11 பேரை அனுப்பி உள்ளார். அவர்கள் அங்கு சென்று சிறுமிகளை  ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.மேலும் பாதிக்கபட்ட  சிறுமிகளிடம் இருந்து மொபைல் போனையும் பறித்து சென்றனர்.

சிறுமிகளின் புகாரின் அடிப்படையில் சதர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து  விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷி அலோக்கின் உத்தரவின் பேரில் பணிக்குழு உருவாக்கப்பட்டது. இது துணை  போலீஸ் அதிகாரி அர்விந்த் குமார் வர்மா மற்றும் மஹ்லி தலைமையில்உருவாக்கப்பட்டது.

ஹர்கி ஹர்ரா டோலி பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 11 பேரை கைது செய்து உள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...