தேசிய செய்திகள்

கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன் + "||" + cm pinarayi vijayan press meet rain-havoc kerala floods

கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்

கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்
கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.

பல இடங்களில் வெள்ளம் நீரில் வடிந்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து, சுத்தம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

10.28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லட்சம் குழந்தைகள் இதில் அடங்குவர் இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி  வழங்கப்படுகிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

கேரளம் புனர்வாழ்வளிக்கும் திட்டத்தின் கீழ்  மறுசீரமைக்கப்பட வேண்டும். பருவ மழையைப் பற்றி விவாதிக்க இந்த மாதம் 30-ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என்று கேரள முதலமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 - கேரள அரசு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ. 10,000 கேரள அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods2018
2. கேரள மழை வெள்ளத்தில் கத்தி முனையில் மிரட்டி மீட்கபட்ட மக்கள்
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததால், அவர்கள் அனைவரையும் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்தது
நேற்று இரவு வரை கேரள முதல்வர் பிரனராயி விஜயன் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்து உள்ளது. #Keralafloods2018