2017-18-ஆம் நிதியாண்டில் அதிக கல்வி கடன்களை பெற்றுள்ள தமிழக மாணவர்கள்


2017-18-ஆம் நிதியாண்டில் அதிக கல்வி கடன்களை பெற்றுள்ள தமிழக மாணவர்கள்
x
தினத்தந்தி 28 Aug 2018 12:13 PM GMT (Updated: 28 Aug 2018 12:13 PM GMT)

2017-18-ஆம் நிதியாண்டில் தமிழக மாணவர்கள் அதிக கல்வி கடன்களை பெற்றுள்ளனர்.

புதுடெல்லி

2017-18-ஆம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் தமிழக மாணவர்கள் ஆயிரத்து 659 கோடி ரூபாய் கல்வி கடன்களை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கர்நாடகாவில் ஆயிரத்து 655 கோடியும், மகாராஷ்டிராவில் ஆயிரத்து 473 கோடியும், ஆந்திராவில் ஆயிரத்து 123 கோடியும்,  கேரளாவில் ஆயிரத்து 169 கோடி ரூபாயும் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், உத்தரபிரதேசத்தில் வெறும் 542 கோடியும், மத்திய பிரதேசத்தில் 479 கோடியும், மேற்கு வங்கத்தில் 162 கோடி ரூபாய் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் அமைந்திருப்பதே அதிக கல்விகடன் பெறப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. அதிலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தான் மிக அதிகம் கல்வி கடன்களை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மொத்த கல்வி கடன்களில் 6 ஆயிரத்து 434 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன்களாக மாறி உள்ளன. இந்திய வங்கிகளின் மொத்த வராக்கடன்களில் இது 8.9 சதவீதம் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story