பிற மாநிலங்களில் எஸ்.சி./எஸ்.டி. என குறிப்பிடாத நிலையில் இடஒதுக்கீடு கோர முடியாது; சுப்ரீம் கோர்ட்டு


பிற மாநிலங்களில் எஸ்.சி./எஸ்.டி. என குறிப்பிடாத நிலையில் இடஒதுக்கீடு கோர முடியாது; சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 30 Aug 2018 11:35 AM GMT (Updated: 30 Aug 2018 11:35 AM GMT)

எஸ்.சி., எஸ்.டி. சமூக உறுப்பினரின் சாதி பிற மாநிலங்களில் குறிப்பிடப்படாத நிலையில் அவர் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பலன்களை அங்கு கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மற்றும் நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். பானுமதி, எம். சந்தானகவுடர் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோரை உள்ளடக்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு, ஒரு மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை அல்லது கல்வி நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த பின் அங்கேயும் அவரை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என கூறிட முடியாது என தெரிவித்து உள்ளது.

இந்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதியை சேர்ந்த நபர் ஒருவர், பிற மாநிலங்களில் அதே சாதியாக குறிப்பிடப்படாத நிலையில், அவர் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பலன்களை கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.


Next Story