இந்திய ரெயில்வே துறை செலவை குறைக்க இயற்கை வாயுவை எரிபொருளாக பயன்படுத்த முடிவு


இந்திய ரெயில்வே துறை செலவை குறைக்க இயற்கை வாயுவை எரிபொருளாக பயன்படுத்த முடிவு
x
தினத்தந்தி 30 Aug 2018 4:23 PM GMT (Updated: 30 Aug 2018 4:23 PM GMT)

இந்திய ரெயில்வே துறை செலவை குறைப்பதற்காக இயற்கை வாயுவை எரிபொருளாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே துறை டீசல் போன்ற திரவ வடிவிலான எரிபொருள் பயன்படுத்துவதில் உலக அளவில் 3வது இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய ரெயில்வே துறையின் சில பிரிவுகள் இயற்கை வாயுவை எரிபொருளாக பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டு உள்ளது.

ரெயில்வேயின் உற்பத்தி மற்றும் பணிமனைகளில் இயற்கை வாயுவை பயன்படுத்துவது லாபம் தரும்.  ஏனெனில் அது மற்ற மாற்று எரிபொருள்களை விட 25 சதவீத விலை குறைவு.

அதனால் வருகிற 2019ம் ஆண்டு ஜூனிற்குள் அனைத்து 54 பணிமனைகளையும் இயற்கை வாயுவை கொண்டு பயன்படுத்தும் முயற்சியில் ரெயில்வே துறை இறங்கியுள்ளது.

இந்திய ரெயில்வே துறை ஆண்டுதோறும் 300 கோடி லிட்டர் டீசலை எரிபொருளாக பயன்படுத்தி வருகிறது.  அவற்றில் ஒரு சிறிய அளவே இயற்கை வாயுவால் பயன்படுத்தும்படி மாற்றப்படும் என அந்த துறையின் மாற்று எரிபொருள்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரி சேத்ரம் கூறியுள்ளார்.

இந்திய ரெயில்வே துறையில் இயற்கை வாயுவை பயன்படுத்தினால் வருடத்திற்கு ரூ.17 கோடி சேமிக்கப்படும்.


Next Story