இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஏற்றுமதி விலை ரூ.32
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.58 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.74.18 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை மிக மிகக் குறைவு என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறித்த விவரங்களை கேட்டு மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார். 3 மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடித்தத்துக்கு தற்போது அந்த நிறுவனம் பதில் அளித்து உள்ளது.
அதில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி முடிய மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாகவும் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story